ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுக்கும் கோட்டா.

ஊடகங்கள் முன் கருத்து தெரிவிப்பதனை தவித்துக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சட்ட ஆலோசனையின் அடிப்படையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை மறுத்துள்ளார் என அவரது போச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவருவதனால், அவரது வழக்கறிஞர்கள் முடிந்தவரை ஊடகங்களிலிருந்து விலகி, நீதிமன்ற வழக்குகளை பாதிக்கக்கூடிய அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர் என கூறினார்.

மேலும் கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுமென்றே ஊடகங்களைத் தவிர்க்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் விரைவில் ஊடகங்களுக்கு பதிலளிப்பார் என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்