உருக்குலைந்த கப்பல் செங்குத்தாக நிற்பது போன்ற கட்டடம் கட்டுவதற்கு அனுமதி!

கப்பல் ஒன்று உருக்குலைந்து செங்குத்தாக நிற்பது போன்ற கட்டடம் கட்டுவதற்கு செக் குடியரசு நாடு அனுமதி அளித்துள்ளது.

அந்நாட்டு தலைநகர் ப்ரேகில் (Prague) சுமார் 135 மீட்டர் உயரம் வரை இந்தக் கட்டடம் கட்டப்பட உள்ளது.

கட்டடங்கள் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்று கூறிய இங்கிலாந்தின் கட்டடக் கலை நிபுணர்களான டேவிட் கேரியும், தாமஸ் ஐசப்பும் ப்ரேகில் கட்டப்படும் இந்த விசித்திரமான கட்டடம் மக்களின் மனதில் எதிர்மறை எண்ணத்தைக் காட்டும் என்றும் இயற்கை அழிக்கப்படக் கூடியதை இந்தக் கட்டடம் உணர்த்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கட்டடம் கட்டுவதற்கு இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor