யாழில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இடம்பெயர்ந்த 250 குடும்பங்களை இடமாற்றம் செய்வதற்காக யாழ்ப்பாணத்தில் 250 வீட்டுவசதி அலகுகளுடன் இரண்டு மாடி இரட்டை வீட்டுக் குடியிருப்பு அமைக்கப்படவுள்ளது.

அந்தவகையில், நியூ மூர் தெருவில் 7.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில் 600 சதுர அடி அளவில் ஒவ்வொரு வீடுகளும் அமைக்கப்படவுள்ளது.

மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் முன்மொழியப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் இதற்கான நிலம் ஒரு நன்கொடையாளரால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதாக அந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Recommended For You

About the Author: Editor