02.10.2019 ராசி பலன்

மேஷம்

மேஷம்: கணவன் மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங் கள் வந்து போகும். புது நட்பு மலரும். எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். பிற்பகல் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்பு களையும் பயன்படுத்தி கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவிகேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியா பாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டு வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை மேலதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலைகளை ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்

கடகம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பழைய பிரச்னையில் ஒன்று தீரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில்பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

கன்னி

கன்னி: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். உற்சாகமான நாள்.

துலாம்

துலாம்: பிற்பகல் 2 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முன் கோபத்தை குறையுங்கள். திட்டமிடாத செலவினங்களை போராடி சமாளிப்பீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்%


Recommended For You

About the Author: Editor