மோடியின் பேச்சை நேரலை செய்யாதவர் இடைநீக்கம்

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவிப் பணிப்பாளர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவிப் பணிப்பாளர் வசுமதியை பணியிடை நீக்கம் செய்து பிரசாத் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சசி ஷேகர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த பணியிடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள வசுமதி சென்னையில் உள்ள தலைமை அலுவலத்தில் தங்கி இருக்கும்படியும், வெளியே செல்ல அவசியம் ஏற்பட்டால் முறையான அனுமதி பெற்றுச் செல்லும் படியும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை நேரலை செய்யாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்