கோட்டாக்கு ஆதரவு தெரிவிக்க பென்சேகாவிற்கு அழைப்பு

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்குமாறு சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இந்த அழைப்பினை விடுத்தார்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சரத் பொன்சேகா, ராஜபக்ஷவுடன் நின்று தனது வெற்றியை நோக்கிப் பணியாற்றுவதற்கான வெளிப்படையான அழைப்பு இது என்றும் அவர் கூறினார்.

மேலும், “கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க அனைத்து ஆதரவாளர்களையும் அழைக்கிறோம். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு உண்மையான தேசபக்தர் என்றால், அவர் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் உள்ள வித்தியாசத்தை அடையாளம் காண வேண்டும். அவர் துரோகிகளுடன் சேரக்கூடாது” என கூறினார்.

அத்தோடு கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னோக்கிய நகர்வினை தடுக்கவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் இது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் திட்டத்தின் பிரகாரமே இது மேற்கொள்ளப்படுவதாகவும் சிசிர ஜயகொடி குற்றம் சாட்டினார்.


Recommended For You

About the Author: ஈழவன்