இருபாலையில் முதியோர் தினம்

இருபாலை தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று  மாலை 5மணிக்கு கட்டப்பிராய் முத்துமாரி அம்மன் திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.

இருபாலை கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் பாக்கியராசா பிரதீபன் தலைமையில் நடைபெற்ற  இந் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பதிகாரி இரட்ணசிங்கம் அமலன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிராம உத்தியோகத்தர் எம்.ஆர்.ஜெயதரன், சமுர்த்தி உத்தியோகத்தர் என்.உமாகாந்தன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.மாதவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக கிராம உத்தியோகத்தர் திருசெல்வம் ஜேசுதாஸ், நல்லூர் லயன்ஸ் கழக தலைவர் சின்னத்துரை இலட்சுமிகாந்தன், மக்கள் ஆதரவு மையத்தின் பணிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரன்,உதயம் கலாசார சங்கத்தின் இணைப்பாளர் தியாகராஜா நிசங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் கிராம நண்மைக்காக உழைத்த முதியோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கௌரவிகப்பட்டதுடன் சிறுவர்களுக்கான பரிசில் பொருட்களும் வழங்கிவைக்ப்பட்டது.

 


Recommended For You

About the Author: ஈழவன்