டிப்பர் மோதியதில் சிறுமி பலி!

திருகோணமலை கண்டி பிரதான வீதியின் ஹதரஸ்கொட்டுவ பகுதியில் டிப்பர் வாகனமொன்று சிறுமி ஒருவர் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் குறித்த சிறுமி ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதாக கல்ஒயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்ஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதரஸ்கொட்டுவ பகுதியிலே இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (30) மாலை இடம்பெற்றுள்ளதாக கல்ஒயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது ஹதரஸ்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய டபிள்யு.எம்.பிரியங்கிக்கா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி வீதியை கடக்க முற்பட்ட வேளை அதிக வேகத்தில் வந்த டிப்பர் வாகனம் சிறுமியின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதோடு,உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Recommended For You

About the Author: Editor