மாந்தை மாதா ஆலயத்தில் திருட்டு!!

மன்னார்- மாந்தை மாதா ஆலயத்தின், பங்கு பணிமனையின் கதவு உடைக்கப்பட்டு ஒரு தொகை பணம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

மாந்தை மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை, வெளியே சென்று மீண்டும் திரும்பியப்போது, பங்கு மனையின் கதவுகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ள சம்பவத்தை அறிந்த அவர், உடனடியாக மன்னார் ஆயர் இல்லத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதனைத் தொடரந்து இவ்விடயம் தொடர்பாக அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை அடிகளார், மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

குறித்த முறைப்பாட்டை தொடர்ந்து, மன்னார் பொலிஸார் ஆலய பகுதிக்கு வந்து விசாரனைகளையும் சோதனைகளையும் மேற்கொண்டனர்.

இதன்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்களை அடிப்படையாக கொண்டே, தற்போது மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor