இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

அந்நாட்டின் முன்னணி பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றி வருபவர் சார்லோட் எட்வர்ட்ஸ். இவர் கடந்த 1999ம் ஆண்டு பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய போரிஸ் ஜான்சன், விருந்து நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டையும் மறுத்துள்ள போரிஸ் ஜான்சன் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை ‘கேவலமான பொய்’ என அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே சார்லோட் எட்வர்ட்ஸ் தனது டுவிட்டரில் பிரதமருக்கு நடந்த சம்பவம் நினைவில் இல்லையென்றால், அவருக்கு அதனை நினைவுபடுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் சிக்கியிருக்கும் போரிஸ் ஜான்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டு அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Recommended For You

About the Author: Editor