அசுரன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

நடிகர் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் ‘அசுரன்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் வரும் 4 ஆம் திகதி அன்று வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அசுரன் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. நிலையில் அசுரன் படத்துக்குத் தணிக்கை குழு யு/ஏ தரச்சான்றிதழை வழங்கியுள்ளது.

பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். ‘கொடி’ படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்