வியாழன் மதுபான சாலைகளுக்கு பூட்டு

சர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறி செயற்படும் மதுபான நிலையங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நாடுமுழுவதும் 1000 ற்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நாட்டின் அனைத்து உரிமம் பெற்ற கடைகளிலும் சோதனைகள் நடத்தப்படும் என பிரதி பிரதி கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க கூறினார்.

அத்தோடு மதுபானத்தை கொண்டுசெல்லல், உற்பத்தி மற்றும் சட்டவிரோதமாக சேமிப்பதில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த சோதனைகளை மேற்கொள்ள நாடு முழுவதும் உள்ள 58 கலால் நிலையங்களைச் சேர்ந்த 1000 அதிகாரிகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக பிரதி கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்