லாட்ஜில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை!

சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.:

கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் ஜெயன் (வயது 30), புனிதாராணி (29), சரண்யா (21), ஜெசிபி(6). 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

கடந்த 7-ந்தேதி திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் லாட்ஜுக்கு சென்றனர். அங்கு அறை எடுத்து தங்கினார்கள்.

நேற்று இரவு லாட்ஜ் ஊழியர் அறையின் கதவை தட்டி கூப்பிட்ட போது எந்த சத்தமும் இல்லை.

இதனால் சந்தேகம் அடைந்து கதவை திறந்து பார்த்த போது 4 பேரும் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ஜெயன், புனிதாராணி, சரண்யா ஆகிய 3 பேரையும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

குழந்தை ஜெசிபியை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஜெயன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

4 பேரும் எதற்காக வி‌ஷம் குடித்தனர் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Recommended For You

About the Author: Editor