சீன அதிபரை சந்திக்கிறார் டொனால்டு டிரம்ப்!

அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்று வரும் நிலையில், ஜி 20 மாநாட்டின்போது சீன அதிபரை சந்தித்து பேச இருக்கிறேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

‘ஜி 20’ மாநாட்டின் போது சீன அதிபரை சந்திக்கிறார் டொனால்டு டிரம்ப்
அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்று வருகிறது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக அளவில் வரி விதித்து வருகிறது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் ஜி 20 மாநாடு ஜப்பானில் இந்த மாதம் 28 மற்றும் 29-ந்தேதிகளில் நடக்கிறது. அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பேச்சுவார்த்தை நடக்கும். அப்படி சந்திப்பு நடக்கவில்லை என்றால் புது வரிவிதிப்பு அமல்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor