முன்னாள் ஜனாதிபதிக்கு இன்று இறுதி அஞ்சலி..!!

முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac சாவடைந்ததை அடுத்து, அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற உள்ளது.

பொதுமக்கள் பார்வைக்காகவும், அஞ்சலிக்காகவும் Invalides இல் உடலம் வைக்கப்பட்டிருந்ததை அடுத்து, இரவு முழுவதும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 7 மணியுடன் Invalides இல் பார்வை நிறுத்தப்பட்டு இறுதி அஞ்சலி நிகழ்வுக்காக உடலம் கொண்செல்லப்பட உள்ளது.

நேற்றைய நாளில் ஒரு கிலோமீற்றருக்கும் அதிகமான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர். இரவு 9 மணி அளவில் Hotel des Invalides இல் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac இன் மகள், இது மிகவும் உணர்ச்சிகரமான ஒரு தருணம்.

திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய பிரெஞ்சு மக்களுக்கு நன்றிகள். குறிப்பிட்ட இந்த தருணம், மிகவும் வலிமையானது என குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் இறுதி அஞ்சலி நிகழ்வு இடம்பெறும்.


Recommended For You

About the Author: Editor