சகல வேட்­பா­ளர்­க­ளு­டனும் பேசத் தயார் – கூட்டமைப்பு!!

எமது ஆத­ரவை பெற்­றுக்­கொள்ள நினைக்கும் சகல வேட்­பா­ளர்­க­ளு­டனும் நாம் பேசத் தயார் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனா­தி­பதி வேட்­பாளர் ஆத­ரவு குறித்து முல்லைத்தீவில் கருத்­து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு தொடர்பாக இன்னமும் இறுதித் தீர்­மானம் ஒன்றும் எடுக்கப்­ப­ட­வில்லை என கூறினார்.

வேட்­பா­ளர்கள் விரும்­பினால் அனை­வ­ரு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்த நாம் தயாராகவே இருக்கின்றோம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது என்றும் அதில் அவர்கள் முன்வைக்கும் காரணிகளை தீர்வுகளை அவதானித்து எமது முடிவுகளை நாம் எடுப்போம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor