வைகோவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுப்பிடித்துத்தரக்கோரி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில், மேற்படி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுப்பிடித்துத்தரக்கோரி ம.தி.மு.க பொதுசெயலாளரான வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவில், “சென்னையில் செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம்.

அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது அது முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. எனவே அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு மறுத்திருந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor