ரஷ்ய தலைநகரில் மாபெரும் எதிர்ப்பு பேரணி!!

ரஷ்ய தலைநகரில் மாபெரும் எதிர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எதிர்ப்பு பேரணியில் 24 ஆயிரம் பேர் பங்கேற்றிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், குறித்த எதிர்ப்பு பேரணியில் எதிர்க்கட்சி தலைவர் Alexei Navalny கலந்துகொண்டிருந்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூர்த் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டதை எதிர்த்து ஜூலை மாதம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போதே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor