மதுபானசாலை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழ்.நெல்லியடி நகரப் பகுதியில் உள்ள மதுபானசாலை உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதகை நடவடிக்கையின் போது மதுபான விற்பனையில் ஈடுபட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மதுபானம் விற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மதுவரித் திணைக்களத்தின் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி இரவு ஒன்பது மணிக்கு மேல் மதுபான விற்பனையில் இவர் ஈடுபட்டுள்ளார்.

இக் குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு எதிராக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நேரத்திற்கும் மேலதிகமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்தநபருக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor