தூணுக்கும் மகிழுந்துக்கும் இடையே சிக்கி 70 வயது நபர் பலி!!

ஞாயிற்றுக்கிழமை 70 வயதுடைய நபர் ஒருவர் மகிழுந்துக்கும் தூணுக்குமிடையே சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் Ancy-le-Franc, (Yonne) இல் இடம்பெற்றுள்ளது. 21:00 மணி அளவில் இந்நகரத்தில் உள்ள தனது வீட்டுக்கு மகிழுந்தில் வந்த குறித்த நபர், மகிழுந்தை நிறுத்திவிட்டு, கீழங்கி வீட்டுக்குள் செல்ல முற்பட்டுள்ளார்.

அப்போது முன்னால் வேகமாக உருண்டு வந்த மகிழுந்து குறித்த 70 வயது நபரை இடித்து தள்ளியுள்ளது. இதனால் தூணுக்கும் மகிழுந்துக்கும் இடையே சிக்கிக்கொண்ட முதியவர், உயிரிழந்துள்ளார்.

மகிழுந்தின் கை பிரேக் (frein à main) இனை அவர் இழுத்திருக்கவில்லை என பின்னர் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

இதனாலேயே மகிழுந்து உருண்டு சென்று அவரை இடித்துள்ளது.

குறித்த நபர் இச்சம்பவத்தின் போது மகிழுந்தை தள்ளி நிறுத்த முற்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor