இங்கிலாந்து முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கைகள்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் மஞ்சள் வெள்ள அபாய எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து கணிசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அதிக மழை எதிர்பார்க்கப்படும் நிலையில் மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் 61 உள்ளூர்மயமாக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகளையும், வெள்ளம் ஏற்பட சாத்தியமான 169 எச்சரிக்கைகளையும் சுற்றுச்சூழல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை சசெக்ஸ் கடலோரத்தில் ஏற்பட்ட அதிக அலைகளும் கடும் மழையும் கடலோர வெள்ள எச்சரிக்கைகளும், மலைகளின் சில பகுதிகள் உடைந்து விழுவதற்கும் வழிவகுத்துள்ளன.


Recommended For You

About the Author: Editor