பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்!

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வரை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது .

கல்விசாரா ஊழியர்களின் தொடர் பணிப் பகிஷ்கரிப்பின் 21ஆவது நாளான இன்று (திங்கட்கிழமை) அடையாள போராட்டமாக இந்த போராட்டம் முன்டெடுக்கப்பட்டது.

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வேட்பாளர்கள் தொடர்பிலே கவனம் செலுத்துகின்றனர். நாட்டில் பல பாகங்களிலும் அரச ஊழியர்களது சம்பள உயர்வு சம்பந்தப் பட்ட போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன அதனை கவனிக்கவில்லை என போராட்ட காரர்கள் குற்றம் சுமத்தினர்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களது பணிபகிஷ்கரிப்பு போராட்டம் சம்பந்தமாக உயர்கல்வி அமைச்சருக்கு தெரியப் படுத்திய போதும் அது தொடர்பில் எதுவித முடிவு எட்டப்படாத நிலை ஏமாற்றத்தை தருவதாக மேலும் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: Editor