உலகின் மிகப்பழமையான மொழியாக தமிழ் – மோடி!

உலகின் மிகப்பழமையான மொழி தமிழ். தமிழை போற்றுவோம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வருகை தந்துள்ள மோடி, ஐ.ஐ.டியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “உங்கள் வெற்றியில் பெற்றோரின் உழைப்பு உள்ளது. இளைஞர்களின் கண்களில் ஒளியை காண்கிறேன். உங்கள் சாதனையில் ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்தியர்களின் முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கையை கண்டு உலகம் வியக்கிறது. சிறந்த மாணவராக மட்டுமன்றி சிறந்த குடிமகனாகவும் விளங்க வேண்டும். அமெரிக்க பயணத்தின்போது பல்வேறு தரப்பினருடன் உரையாடினேன்.

எதிர்கால இந்தியாவின் கனவுகளை உங்கள் கண்களில் பார்க்கிறேன். நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி உள்ளது. இந்தியாவின் இளைய தலைமுறையினரின் நம்பிக்கையைக் கண்டு உலகத் தலைவர்கள் பிரமிக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor