நுரைச்சோலையின் முதல் அலகு தற்காலிகமாக மூடப்பட்டது!!

நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தின் முதல் அலகு பழுதுபார்க்கும் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட உள்ளது.

இதனால் தேசிய மின் வலையமைப்பிற்கு வழங்கப்படும் 300 மெகாவோல்ட் மின்வலு மின்சாரத்தை வழங்கும் முதல் அலகு 100 நாட்களுக்கு மூடப்படும் என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்தார்

தற்போது, நுரைச்சோலை ஆலையில் மூன்று அலகுகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் 300 மெகாவோல்ட் மின்வலு மின்சாரத்தை வழங்குகின்றன.

இந்நிலையில் அடுத்த மாதம் 7 மேலதிக மின் உற்பத்தியாளர்களுடனான ஒப்பந்தங்கள் முடிவடையும் நிலையில் தேசிய மின் வலையமைப்பிற்கு 100 மெகாவோல்ட் மின்வலு மின்சாரத்தை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இழந்தவற்றை சரிசெய்யும் முகமாக அமைச்சு இதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சர் ரவி கருணநாயக்க கூறினார்.

இருப்பினும் பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor