ஐரோப்பாவில் மலை ஏறும் மட்டு மாணவன்!

ஜனாதிபதி விருது பெற்ற சாரணியரும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மாணவனான அமலநாதன் சஞ்சீவன், ஐரோப்பாவின் உயரமான மலையான எல்ப்ரஸ் மலை ஏறுவதற்காகப் பயணமாகியுள்ளார்.

எல்ப்ரஸ் மலையில் ஏறி அதன் உச்சியில் உலக சாரணக் கொடி, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் கொடியையும் இவர் பறக்கவிடவுள்ளார்.

இவருடைய இந்த மலையேறும் பயணத்தை, மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்த பிரதீபன், உதவி மாவட்ட சாரண ஆணையாளர் (நிர்வாகம்) ஐ.கிரிஷ்றி ஆகியோர், உலக சாரணிக் கொடியை வழங்கி ஆரம்பித்து வைத்தனர்.

5642 மீற்றர் உயரமான இந்த மலையில் வருடத்துக்கு 15 – 20 ஆயிரம் பேர் ஏறிவருகின்றனர். இலங்கையர்கள் பலர் ஏறியுள்ள போதும், கிழக்கு மாகாணத்திலிருந்து செல்லும் முதலாவது நபர் இவர் ஆவர்.

இவர், கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் நல்லெண்ண நோக்கமாக பருதித்தித்துறையிலிருந்து மாத்தறை வரை நடைப்பயணம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor