வன்னியூர் செந்தூரனுக்கு விருது

பன்னாட்டுத் தமிழர் நடுவம், அங்கோர் தமிழ் சங்கம் மற்றும்  கம்போடிய கலாசார அமைச்சு ஆகியன இணைந்து நடாத்திய உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாடு 2019 ஆனது கம்போடியா நாட்டின் சியாம்ரிப் மாநிலத்தில் கடந்த  20 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பல நூற்றுக்கணக்கான சிறப்புவாய்ந்த தேர்வுசெய்யப்பட்ட கவிஞர்களின் இணைவுடன் நடைபெற்றது.

இம்மாநாட்டிற்காக இலங்கையிலிருந்து பத்துக்கவிஞர்கள் கம்போடியாவிற்கு அழைக்கப்பட்டார்கள். ஆய்வரங்கு,கவிதைநூல் வெளியீடு,கவிச்சமர்,என்பவற்றோடு கம்போடிய கலாசார அமைச்சின் அரச விருதும் கவிஞர்களுக்கு தகுதி மற்றும் படைப்புக்களின் காத்திரத்தன்மை,சேவைக்காலம் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டது.

வன்னியிலிருந்து இம்மாநாட்டிற்காக கம்போடியா அரசால் அழைக்கப்பட்ட “கவிஞர் வன்னியூர் செந்தூரன் “அவர்களின் கலை இலக்கியப்பணிகளைப்பாராட்டி “உலக தொல்காப்பியர் விருது ” எனும் உயர்நிலை சர்வதேச அங்கிகாரமுள்ள கம்போடிய அரசவிருதினை அந்நாட்டு கலை கலாசாரத்துறை அமைச்சர் “மோரன் சொகீப்”22.09.2019 அன்று வழங்கிக்கௌரவித்தார்.

இலங்கையில் எழுத்துத்துறையில் நீண்ட காலம் பயணிக்கும் கவிஞர் வன்னியூர் செந்தூரன் 2013 ம் ஆண்டு இலங்கை தேசியவிருதாகிய காவியப்பிரதீபா எனும் விருதினையும், கடந்த 02.09.2019 அன்று இந்து கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சு தேசியம் தழுவி வழங்கிய அரச விருதுவிழா 2019 ல் “கலை இளவரசன் “எனும் பட்டத்தையும் இலங்கை இலக்கியத்துறைக்கான அரசவிருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

 


Recommended For You

About the Author: ஈழவன்