சமுத்திரத்தை பாதுகாக்க கோரி பரிசில் ஆர்ப்பாட்டம்

சமுத்திரத்தை பாதுகாக்க கோரி பரிசில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

‘உலக சமுத்திரம் தினம்’ (World Oceans Day) நேற்று முன்தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த நாளில் சில நூறு ஆர்வலர்கள் பரிசில் மிக வித்தியாசமாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

Surfrider Europe Foundation,
French branches of the World Wildlife Fund,
Tara Ocean Foundation,
Greenpeace Paris
Sea Shepherd
ஆகிய ஐந்து அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடட்டனர்.

தங்களை கடல்வாழ் உயிரிழனங்கள் போல் சித்தரித்து, உடலில் நீல நிற வர்ணம் பூசி, கடல் விலங்குகளாகவும், பாசி கற்களாகவும் வேடமணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காலநிலையை தீர்மாணிப்பதில் சமுத்திரம் பெரும் பங்கு வகிக்கின்றது என்பது அவர்கள் கோஷமாக இருந்தது.

தாம் 2,000 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த்தாக அமைப்பினர் குறிப்பிட்டனர்.


Recommended For You

About the Author: Editor