மாற்று சக்தி நானே – மகேஸ்

பாதுகாப்புப் படையினரையும் பொலிஸாரையும் சுதந்திரமாக செயற்பட அரசியல்வாதிகள் முட்டுக்கட்டையாக இருந்துள்ளனர் என்றும் அது மாற வேண்டும் எனவும் தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர்  மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது முடிவை அறிவிக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இலங்கைக்கு ஒரு மாற்று சக்தி தேவை என்றும், தானே அந்த மாற்று என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

நாடு மேலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளமையினால் தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் இராணுவத் தளபதி கூறினார்.

இந்த நாட்டினை அரசியல் பாழாக்கிவிட்டது என சுட்டிக்காட்டிய மகேஷ் சேனநாயக்க நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர ஒரு சுதந்திர சக்தி இருக்க வேண்டும் என கூறினார்.

தனது அணியில் அரசியல்வாதிகள் இல்லை என்றும் ஆனால் கல்வியாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் அடங்குவதாகவும் முன்னாள் இராணுவ தளபதி கூறினார்.

வழிநடத்தல் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பிற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதனை பூரணப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் நிலையான பொருளாதாரத்தை உறுதிசெய்து நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதே தனது பிரதான இலக்கு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


Recommended For You

About the Author: ஈழவன்