தொழிற்சங்கங்களுடன் பேச்சு

ரயில்வே தொழிற்சங்கங்களின் தொழிற்சங்கப் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்களைச் சேர்ந்த ஊழியர்களே இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு, நாளை சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் ரயில் தொழிற்சங்கத்தினர் மற்றும் கடந்த தினங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏனைய தொழிற்சங்கத்தினருடன் இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்