சுஷ்மாவின் இறுதி ஆசை நிறைவேறியது.

மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை அவரது மகள் பன்சூரி ஸ்வராஜ் நிறைவேற்றியுள்ளார்.

பாகிஸ்தான் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவை விடுதலை செய்ய வேண்டுமென சுஷ்மா சுவராஜ் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

மேலும், சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவிற்கு ஆதரவாக வாதாடிய சட்டத்தரணி ஹரிஷ் சால்வே, இந்த வழக்கிற்காக ஒரு ரூபாயை ஊதியமாக பெற்றுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

அதற்கு சுஷ்மா சுவராஜ், ஹரிஷ் சால்வேயை பாராட்டியதோடு, குல்பூஷண் வழக்கில் வாதாடியதற்காக உங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியமான ஒரு ரூபாயை நாளை வந்து என்னிடம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கடந்த ஆகஸ்ட் 6ஆம்  திகதி கூறியிருந்தார். ஆனால், அன்றைய தினமே உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்தே நேற்று, (சனிக்கிழமை) சட்டத்தரணி ஹரிஷ் சால்வேயை சந்தித்து, குல்பூஷண் வழக்கில் வாதாடியமைக்கான ஊதியம் ஒரு ரூபாயை, சுஷ்மா சுஷ்மாவின் மகள் பன்சூரி சுஷ்மா சுவவராஜ்  வழங்கியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்