தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஒக்டோபரில்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்கான பணிகளை, பிரதான கட்சிகள் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி இந்த பிரச்சாரக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞானம் ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுகள் எதிர்வரும் 07ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்