பணிபகிஸ்கரிப்பு பிற்போடப்பட்டது

நாளை(திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவிருந்த பொது நிர்வாக அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு பிற்போடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

சில முக்கிய காரணிகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பும் நடைபெறவுள்ளதால், அதற்கு இடமளிக்கும் வகையில் தமது பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை எதிர்வரும் புதன்கிழமை வரை ஒத்திவைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சம்பள முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச நிர்வாக சேவை அதிகாரிகள் முன்னர் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்