துப்பாக்கி சூட்டில் சிறுவன் பலி

மட்டக்களப்பு, கித்துள் காட்டுக்கு உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 4 பேர் வேட்டைக்கு சென்ற நிலையில் குறித்த துப்பாக்கி தவறுதலாக இயக்கப்பட்டதில் 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த குறித்த சிறுவன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்