பாலியல் பலாத்கார வழக்கில் பராமரிப்பு மையம் இயக்குனர் கைது..!!

பராமரிப்பு மையம் ஒன்றின் இயக்குனர் ஒருவர் மூன்று வயது சிறுமி மீது பாலியல் சீண்டல்கள் மேற்கொண்டுள்ளார்.
Châteaufort, Yvelines நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக நேற்று வெள்ளிக்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.
42 வயதுடைய நபர் ஒருவர் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்றை நிகழ்த்தி வருகின்றார். இந்நிலையில் அவர் 3 வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல்கள் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர, மேலும் 13 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்ததாகவும், அவரை பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் அறிய முடிகிறது.
அச்சிறுமியின் அந்தரங்களை புகைப்படம் எடுத்துள்ளார். அவை காவல்துறையினரின் கைக்கு கிடைத்துள்ளது.

Recommended For You

About the Author: Editor