முடிவுக்கு வரும் Oribiky மிதிவண்டி சேவைகள்!

பரிசில் மிதிவண்டிகள் வாடகைக்கு விடும் Oribiky நிறுவனம் தனது சேவைகளை முடித்துக்கொண்டு பரிசில் இருந்து புறப்பட உள்ளது.

அறிமுகப்படுத்தி ஒரு வருடங்கள் கூட நிறைவுபெறாத நிலையில், இந்த ‘நீலம் வெள்ளை மற்றும் சிவப்பு’ வண்ணங்களிலான மிதிவண்டிகள் இனிமே பரிசில் காண முடியாது. முதலீட்டாளர்கள் பற்றாக்குறை காரணமாக அவர்கள் நிறுவனத்தை மூடிவிட்டு பரிசில் இருந்து வெளியேற உள்ளனர்.

சென்-செந்தனியில் தயாரிக்கப்பட்ட இந்த மிதிவண்டிகள் பிரான்சை அடையாளப்படுத்தும் விதமாக மூவர்ண நிறத்தில் உருவாக்கப்பட்டது. டிசம்பர் 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட நிலையில், எதிர்பார்க்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கிடைக்கவில்லை. தவிர முதலீட்டாளர்களும் கிடைக்கவில்லை.

மிதிவண்டி வாடகைக்கு விடும் நிறுவனங்களில் நான்காவது இடத்தில் இந்த Oribiky நிறுவனம் உள்ளது. 300 மிதிவண்டிகள் மாத்திரமே முதல்கட்டமாக கொண்டுவரப்பட்டதும், பின்னர் அதை அதிகரிக்கவேண்டிய தேவை ஏற்படவே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor