15 வயது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 வயது சகோதரன்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட 20 வயதுடைய சகோதரனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (18) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின் தந்தையாரின் முதல் மனைவியின் மகனான 20 வயது சகோதரன் தந்தையாரின் இரண்டாவது மனைவியின் மகளான 15 வயது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த இளைஞரை நேற்று (27) கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில், சந்தேகநபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் முடித்து அவருடன் வாழ்ந்து வருவதாகவும், சிறுமியின் தந்தையார் சிறிய தாயுடன் வாழ்ந்து வருவதாகவும், பாடசாலையில் கல்வி கற்று வரும் குறித்த சிறுமியான சகோதரியை கடந்த ஒரு மாதகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞர் இன்று (28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor