கிளிநொச்சியில் கோலாகலமாக இடம்பெற்ற சீன நிகழ்வு!!

சீன இலங்கை நட்புறவினை மேம்படுத்தும் வகையில் HUBEI கலாச்சார சுற்றுலா வாரத்தின் நிகழ்வுகள் நேற்றையதினம் கிளிநொச்சியல் இடம்பெற்றது.

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள லெலும்பியச மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

சீனாவின் கலை கலாச்சார விழுமியங்களை பறைசாற்றும் வகையிலும், சீன இலங்கை நட்புறவினை மேம்படுத்தும் வகையிலும் இந் நிகழ்வு இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நிகழ்வை பார்வையிட பெருமளவான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட படை உயரதிகாரிகள், கலைஞர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இறுதியில் சீன, இலங்கை தேசி கீதங்கள் இசைக்கப்பட்டதை அடுத்து நிகழ்வு நிறைவடைந்துள்ளது.


Recommended For You

About the Author: Editor