வீட்டுக்குள் கஞ்சா புதைத்து வைத்தவர் கைது.

வீட்டு வளவுக்குள் 36 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை புதைத்து வைத்திருந்தகுடும்பத்தலைவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்..

பருத்தித்துறை அல்வாய் பகுதியில் உள்ளவீடொன்றில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த தேடுதல்முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார்தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ்புலனாய்வுப் பிரிவும் மாவட்ட போதைத்தடுப்புப் பிரிவும் இணைந்து இந்தநடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.

“யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்அடிப்படையில் அல்வாயில் உள்ள வீடுஓன்றுக்குள் சோதனையிடப்பட்டது.

உரப்பைகளில் பொதியிடப்பட்ட நிலையில்36 கிலோ கிராம் கஞ்சாபோதைப்பொருள் நிலமட்டத்துக்கு மணல்போடப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது.

அதனை புதைத்து பதுக்கி வைத்திருந்தார்என்ற குற்றச்சாட்டில் அந்த வீட்டின்உரிமையாளரான 44 வயதுடையகுடும்பத்தலைவர் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர்பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்ஒப்படைக்கப்பட்டார்” என்றும் பொலிஸார்கூறினர்.


Recommended For You

About the Author: ஈழவன்