நீராவி அடாவடி பிக்குகள் மீது வழக்கு தாக்கல்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி விவகாரம் தொடர்பில் பௌத்தபிக்குகளிற்கு எதிராக இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கினை முல்லைத்தீவு பொலிஸாா் இரு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனா்.

நீதிமன்றத்தின் கட்டளையினை மீறி பிள்ளையாா் ஆலய தீா்த்தகேணிக்கு அருகில் பிக்குவின் உடலை தகனம் செய்தமை மற்றும் அதனை தொடா்ந்து இடம்பெற்ற வன் செயல்கள தொடா்பாக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீராவியடிப் பிள்ளையார் ஆலயச் சூழலில் பிக்குவின் தகனக் கிரிகை மேற்கொள்ள மேற்கொண்ட முயற்சியை தடைசெய்யுமாறு ஆலய நிர்வாகம் தொடுத்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணிகள் வழக்கின் கட்டளையை எதிர் மனுதாரர்களின் சட்டத்தரணிகளின் அழைப்பின் பெயரில்

தெரிவிக்கச் சென்ற சமயம் சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் நீதி மன்ற கட்டளையை மீறி ஆலய தீர்த்தக்கேணி பகுதியில் உடலம் தகனம் செய்தமை தொடர்பில் நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றிற்கு பொலிசார் இரு இடைக்கால அறிக்கை ( பீ அறிக்கை ) சமர்ப்பித்துள்ளனர்.

இந்தநிலையில் பீ அறிக்கைகள் திங்கட் கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor