இன்று ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல்!!

ஆப்கானிஸ்தானில் இன்று(சனிக்கிழமை) ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் மக்கள் மத்தியில் பதற்றம் கலந்த அச்சம் நிலவி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாக்களிக்கும் மக்களை குறி வைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் காரணமாகவே இவ்வாறு பதற்றம் நிலவி வருவதாக தெரிவிவிக்கப்படுகின்றது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தற்காக தனது விரல் வெட்டப்பட்டதாக கூறும் அஹமட், தலிபான்கள் இன்று நடைபெறும் வாக்களிப்பிலும் சதி செயல்களில் ஈடுபடுவார்கள் என்ற அச்சம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், நான் எனது நாட்டின் மீது பற்று வைத்திருக்கிறேன். நான் நிச்சயம் வழக்களிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலினை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயுதம் ஏந்திய பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor