மலையகத்தில் நிகழ்ந்த அதிசயம்!

நல்லதண்ணி, லக்ஷபான தோட்டத்தில் இராட்சத காளான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக மரம் ஒன்றின் கீழ் பகுதியில் வளர்ந்த இந்த காளான் நேற்று காலை அந்த தோட்ட தொழிலாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழுப்பு மற்றும் வெள்ளை நிறங்களிலான ஒரு காளான் சுமார் 3 கிலோ நிறையை கொண்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த காளான் சமையலுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், மிகவும் சுவையாக இருந்ததாக அந்த தோட்டத்தின் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor