சர்வதேச நெருக்கடி குழு இலங்கையை எச்சரிக்கை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கையில் முஸ்லீம்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஆபத்தான நடவடிக்கைகளால் இலங்கையின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது உலகின் பிரபலமான சர்வதேச நெருக்கடி குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதே நெருக்கடி குழு இதனை தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல்வாதிகளும் சிங்கள தேசியவாதிகளும் பரந்துபட்ட முஸ்லீம் சமூகத்தை துன்புறுத்தி அவமானப்படுத்திய நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தியுள்ளனர் என சர்வதேச நெருக்கடி குழு தெரிவித்துள்ளது.

சிங்கள தேசியவாதிகள் வன்முறை மற்றும் குரோத நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர், என தெரிவித்துள்ள சர்வதேச நெருக்கடி குழு முஸ்லீம் சமூகத்தை பொருளாதார ரீதியில் புறக்கணிப்பது முகத்தையும் உடலையும் மூடி ஆடையணியும் பெண்கள் மீதான தாக்குதல்கள் ஊடகங்களில் அவதூறு பிரச்சாரங்கள் போன்றவற்றையும் அவர்கள் முன்னெடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor