நைஜீரிய சித்திரவதையில் இருந்து 100 மேற்பட்டோர் விடுதலை

நைஜீரியாவின் வடக்கு நகரமான கடுனாவில் உள்ள ஒரு கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருந்ததாக நைஜீரியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய பள்ளி என்று கருதப்பட்ட இடத்தில் சங்கிலியால் கட்டப்பட்டவர்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இருந்தனர் என்று பொலிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடுனா நகர பொலிஸ் தலைவர் அலி ஜங்கா நிருபர்களுக்குத் தெரிவிக்கையில்; கட்டிடமொன்றில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை இடம்பெறுவது குறித்து தகவல் கிடைத்த பின்னர் அந்தக் கட்டிடம் சோதனை செய்யப்பட்டபோதே கைதிகள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது என்று குறிப்பிட்டார்.

மேலும் அந்தக் கட்டிடத்தை சித்திரவதை வீடு என்றும் மனித அடிமைத்தனத்தின் இடம் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

அத்துடன் எட்டுச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள் என்றும் கூறினார்.

கைதிகள் அனைவரும் பட்டினியால் மெலிந்த நிலையில் காயங்களுடன் காணப்பட்டனர் என்றும் விடுவிக்கப்பட்டபோது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாகவும் பொலிஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor