எவன்காட் விவகாரம் – சிங்கப்பூரில் இருந்து வந்தவர் கைது!

எவன்காட் ஆயுத கப்பல் தொடர்பான வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், இன்று அதிகாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அனுமதிப்பத்திரமின்றி 816 துப்பாக்கிகள் மற்றும் 2 இலட்சத்துக்கும் அதிக ரவைகளுடன் காணப்பட்ட எவன்காட் ஆயுதக்கப்பல் தொடர்பான வழக்கு தொடர்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவன்காட் கடற்பாதுகாப்பு பிரிவின் பிரதானியாக செயற்பட்ட வி.என். தியபலனகே என்ற சந்தேக நபர், இன்று அதிகாலை 00.15 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வந்த SQ 468 என்ற விமானத்தில் வந்திறங்கிய நிலையில் விமானநிலைய குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் குற்றப்புலனாய்வு தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor