அம்மாவின் பாதையில் அங்கோலா கண்ணிவெடி வயல்களில் இளவரசர் ஹரி!

கண்ணிவெடிகளால் ஏற்படும் அச்சுறுத்தலை முன்னிலைப்படுத்த தனது தாயார் இளவரசி டயானாவின் அடிச்சுவடுகளை பின்பற்றி அங்கோலாவில் உள்ள கண்ணிவெடி வயல்களுக்கு இளவரசர் ஹரி விஜயம் செய்துள்ளார்.

22 ஆண்டுகளுக்கு முன்னர் வேல்ஸ் இளவரசியும் இளவரசர் ஹரியின் தாயாருமான டயானா கண்ணிவெடிகளை சட்டவிரோதமாக்குவதற்கான தனது பிரசாரத்திற்காக இதே இடத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

1997 ஆம் ஆண்டில் ஆபிரிக்க நாட்டின் அங்கோலாவில் கண்ணிவெடி வயலொன்றின் வழியாக நடந்து சென்ற இளவரசி டயானா உலகின் கவனத்தை ஈர்த்தார்.

வெடிமருந்துகளால் பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலையை முன்னிலைப்படுத்துவதும், ஆயுதங்களுக்கு தடை விதிப்பதும் இளவரசி டயானாவின் நோக்கமாக இருந்தது.

கண்ணிவெடிகள் ஒரு குணப்படுத்தப்படாத போரின் வடு எனவும் கண்ணிவெடிகளை அகற்றுவதன் மூலம் இந்த சமூகத்திற்கு அமைதியைக் காண நாங்கள் உதவ முடியும் எனவும் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

அங்கோலா மலைப்பகுதிகளில் உள்ள ஒகாவாங்கோ நீர்நிலைகளில் இருந்து கண்ணிவெடிகளை அகற்ற சர்வதேச முயற்சிக்கும் இளவரசர் ஹரி அழைப்பு விடுத்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor