இரண்டு கடைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்..!!

Essonne மாவட்டத்தில் உள்ள இரு இடங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவ்விரு இடங்களில் வசிக்கும் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Corbeil-Essonnes (Saint-Germain-lès-Corbeil ) நகரில் உள்ள O Marché Frais வணிக வளாகத்தில் முதலாவது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்து அங்கு காவல்துறையினரும் ஜோந்தாமினர்களும், வெடிகுண்டு அகற்றும் வல்லுனர்களும் விரைந்து சென்றனர்.

பின்னர் அங்கிருந்த 250 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு, தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் மீட்கப்படவில்லை.

பின்னர், இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் இங்குள்ள Green Cross (Saint-Germain-lès-Corbeil) வணிக வளாகத்திலும் இது போல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.

அங்கிருப்பவர்களும் வெளியேற்றப்பட்டதுடன், தீவிர தேடுதல் வேட்டையும் இடம்பெற்றது. ஆனால் அங்கும் குண்டுகள் எதுவும் மீட்கப்படவில்லை.

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


Recommended For You

About the Author: Editor