மீண்டும் RATP ஊழியர்கள் வேலை நிறுத்ததிற்கு அழைப்பு..!!

கடந்த சனிக்கிழமை RATP தொடருந்து ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
Force ouvrière (FO) தொழிற்சங்கம் தன்னுடைய ஊழியர்களை வேலை நிறுத்தத்துக்கு அழைத்துள்ளது. டிசம்பர் 5 ஆம் திகதி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. தவிர CGT உள்ளிட்ட சக தொழிற்சங்க ஊழியர்களையும் வேலை நிறுத்தத்திற்கு அழைத்துள்ளது.

கடந்தவாரம் 6,000 பேர்வரை வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டார்கள் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வரும் ஆர்ப்பாட்டம் எந்த அளவில் பாதிப்புக்களையும், போக்குவரத்தையும் பாதிக்கும் என வேலை நிறுத்த நாள் நெருங்கும் போதுதான் அறிய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor