40 கி.மீ தவறான பாதையில் பயணித்த மகிழுந்து! – மூவர் பலி..!

சாரதி ஒருவர் இரண்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு நெடுஞ்சாலை ஒன்றின் எதிர் திசையில் பயணித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை அதிகாலை இச்சம்பவம் மேற்கு பிரான்சின் Nantes நகரில் இடம்பெற்றுள்ளது. 39 வயதுடைய நபர் ஒருவர் A11 நெடுஞ்சாலையின் எதிர்திசையில் பயணித்துள்ளார்.

இதனால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் குறித்த மகிழுந்து சாரதி உயிரிழந்துள்ளார். தவிர, மற்றுமொரு மகிழுந்தின் 29 வயதுடைய சாரதியும், அதில் பயணித்த பயணி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

ஜோந்தாமினர்கள் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் விபத்து ஏற்படக்காரணமாக இருந்த மகிழுந்து வீதியின் எதிர்திசையில் மொத்தமாக 40 கி.மீ தூரம் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த பெப்ரவரி மாதத்தில் இதேபகுதியில் வீதியின் எதிர்திசையில் பயணித்த இருவர் கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor