கொடிகாமத்தில் மயங்கி விழுந்தவர் மரணம்

தென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

நேற்று (27) இரவு 7.00 மணியளவில் கொடிகாமம் பேருந்து நிலையத்திற்கு பின் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து இறந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

60 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்