உத்தரப்பிரதேசத்தில் கனமழை – 25 பேர் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்காரணமாக ஒரே நாளில் 25பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் முக்கிய நகரங்களான ரேபரேலி, அமேதி, லக்னோ, உன்னாவ் ஆகிய நகரங்கள் உற்பட பல இடங்களில் மழை வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிகாரிகள், கடந்த 24 மணி நேரத்தில் மழை வெள்ளம் தொடர்பான விபத்துகளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

மரங்கள் வேரோடு சாய்ந்ததால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பகுதிகளை பார்வையிட்ட அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், வெள்ள நீரை வெளியேற்றவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor